அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு கொரோனா!

 

அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 4,086 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரேநாளில் 80 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 13,475 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, முழு பொதுமுடக்கம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திரையரங்கு, வணிக வளாகங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு கொரோனா!

இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்த தேர்தலின் முடிவு வரும் மே 2ம் தேதி தெரிய உள்ளது. ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது உடல்நிலை பாதிப்புக்கு ஆளானார். சர்க்கரை, காய்ச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார் . இதையடுத்து சில இரண்டு தினங்களுக்கு முன்பு தர்ம தங்கவேலுவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . தற்போது தர்ம. தங்கவேல் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது