விஜய்யுடன் அதிமுக கூட்டணியா? செல்லூர் ராஜூ பரபரப்பு

 
ve

 விஷாலே அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வரலாம்.  அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொன்ன செல்லூர்ராஜூ,  விஜய் முதலில் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.  அதன்பின்னர் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து தான் அவருடன் கூட்டணி வைப்பதா என்பது பற்றி சொல்ல முடியும் என்கிறார்.

se

கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும் விஜய் முன்னோட்டமாக சில காரியங்களை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார். தனது மன்றத்து நிர்வாகிகளை தேர்தலில் இறக்கி பார்த்தார்.  அவர்கள் வெற்றி பெற்றதால் விஜய்க்கு நம்பிக்கை கூடியிருக்கிறது .  இதை அடுத்து முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த சொல்லி அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வை முன்வைத்திருக்கிறார்.   

இதன்பின்னர் அவர் நேரடியாக அரசியலுக்கு வருவதற்காக உறுப்பினர்கள்,  பூத்கமிட்டி உள்ளிட்டவற்றை பலப்படுத்தி வருகிறார்.  இந்த நிலையில் தான் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் விஜய்யை குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.

op

தற்போது எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வரும் ஆன எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

   அப்போது நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு,  ஜனநாயக நாட்டில் யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.  ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது,  பல படங்கள் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.  விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும்.  அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் பற்றியும் அவர்களுடன் கூட்டு வைப்பதா என்பது  பற்றியும் சொல்ல முடியும் என்று கூறி இருக்கிறார்.

v

 ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் முதலமைச்சராகி இருக்க முடியுமா என்ற வைத்தியலிங்கத்தின் கேள்விக்கு,  எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் . பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி இருக்கிறார்.  பாஜகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு,  எங்களின் ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான்.  மற்றபடி பாஜகவும்,  காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான் . யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்று சொல்லி அதிரடி காட்டி இருக்கிறார்.