என்னிடம் 152 கேள்விகள் கேட்டாங்க… அதே மாதிரி அமலாக்கத்துறை எல்லாரிடமும் கேள்வி கேட்கணும். அகமது படேல்

என்னிடம் 152 கேள்விகள் கேட்டாங்க… அதே மாதிரி அமலாக்கத்துறை எல்லாரிடமும் கேள்வி கேட்கணும். அகமது படேல்

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கிகளில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தியின் முக்கிய ஆலோசகரும், காங்கிரஸ் நாடாளுமன்ற மாநிலங்களவை அகமது படேலிடம் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 முறை விசாரணை நடத்தினர்.

என்னிடம் 152 கேள்விகள் கேட்டாங்க… அதே மாதிரி அமலாக்கத்துறை எல்லாரிடமும் கேள்வி கேட்கணும். அகமது படேல்

இந்நிலையில் நேற்று 4வது முறையாக அகமது படேலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அகமது படேல் கூறியதாவது: அமலாக்கத்துறையிலிருந்து எனது நண்பர்கள் இன்று (நேற்று) என்னை வந்து சந்தித்தனர். கடந்த 4 தினங்களில் என்னிடம் 152 கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள் கேட்க வேறு எதுவும் இல்லை என நான் நினைக்கிறேன். நான் ஒவ்வொரு விவரத்தையும் அவர்களிடம் வழங்கினேன். ஆனால் இதே மாதிரி மற்றவர்களிடமும் அவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என விரும்புகிறேன்.

என்னிடம் 152 கேள்விகள் கேட்டாங்க… அதே மாதிரி அமலாக்கத்துறை எல்லாரிடமும் கேள்வி கேட்கணும். அகமது படேல்

அப்பம்தான் இது சீரான விசாரணை என நமக்கு தெரியும். சட்டம் அதன் சொந்த போக்கை எடுக்கட்டும். எந்தவொரு தவறும் செய்யாத நபர் பயப்படக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அமலாக்கத்துறை முதலில் விசாரணைக்கு வரும்படி அழைத்தற்கு, மூத்த குடிமக்கள் வெளியே செல்லக்கூடாது என்ற நடைமுறையில் உள்ள கோவிட்-19 விதிமுறைகளை காரணம் காட்டி அகமது படேல் வரமுடியாது என தெரிவித்தார். அதன்பிறகுதான் அவரது வீட்டுக்கு சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.