அதிமுக- பாஜக முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி?- வெளியான அதிர்ச்சி பின்னணி
அதிமுக பாஜக முதற்கட்ட பேச்சுவார்த்தை முழு மனதாக நடந்து முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளதாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே உள்ளது.இதனை வலுப்படுத்த பாமக, அமமுக, ஓபிஎஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பியூஷ் கோயல் இன்று தமிழகம் வந்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே பி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பாஜக பொறுப்பாளர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.
முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ் இருந்தால் நான் இணைய மாட்டேன் என தொடர்ந்து டிடிவி தினகரன் தெரிவித்து வருகிறார். அவரை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என இபிஎஸ் தரப்பும் கூறிவருகிறது. இரு தரப்பையும் பாஜக தேசிய தலைமை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஓபிஎஸ் அதிமுக வில் இணைய சிவப்பு கொடியை மட்டுமே இபிஎஸ் காண்பிக்கிறார். அதிமுக இணைய வேண்டும் என ஓபிஎஸ் கெடுவித்ததார்.அதனை தொடர்ந்து இன்று இபிஎஸ் தலைமையில் உள்ள அதிமுகவில் இணைய முடியாது எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டாம் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அண்ணாமலை மூலமாக ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து சமாதானம் செய்தும் அது எடுபடவில்லை. நயினார் நாகேந்திரனும் இபிஎஸ் வுடன் ஆலோசனை மேற்கொண்ட போது, இருவரும் இணைக்க கூடாநு என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்தே நயினார் டெல்லி சென்று இது குறித்தும் பேசினார்.

அதனை தொடர்ந்தே இன்று தேர்தல் பொறுப்பாளர்கள் தமிழகம் வருகை தந்து நேரடியாக இபிஎஸ் வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினர். பாஜக அதிமுகவிடம் 70 தொகுதிகள் வரை கேட்கும் நிலையில் அதற்கு இபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்ததோடு, அவ்வளவு தொகுதிகள் ஒதுக்க முடியாது, கடந்த 2021 தேர்தலிர் ஒதுக்கிய இடங்களை விட ணில தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பு பியூஷ் தரப்பிடம் தெரிவித்துள்ளது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக பாஜக இரு தரப்பும் திருப்தி அடையவில்லை. இதனால், ஓபிஎஸ் டிடிவி தினகரன் விவகாரம் பேசப்பட்டது. இது குறித்து அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியை வலுபடுத்த ஓபிஎஸ் டிடிவி தினகரன், பாமக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக பியூஷ் கோயல் தெரிவிக்க, அதற்கும் அதிமுக தரப்பில் இபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் கூட்டணியில் இருக்க வேண்டாம், இரு தரப்பை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டில் சமரசம் செய்து கொள்ளலாம் என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாஜகவிற்கு 30 முதல் 35 தொகுதிகள் வரையிலும், பாமக வந்தால் 20 - 25 தொகுதிகள் வரையிலும் மற்ற இதர கட்சிகளுக்கு 10 - 15 தொகுதிகளுக்குள் அடக்க வேண்டும். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் 160 - 170 தொகுதிகளில் போட்டியிடும் என அதிமுக பாஜக பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு பாஜகவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர்களுக்கான இடங்களை எங்கள் ஒதுக்கீட்டுல் வழங்குகிறோம் என பாஜக பொறுப்பாளர்கள் அதிமுக தலைவர்களிடம் தெரிவித்திருப்பது அதிமுகவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் 9 மாதங்களாகவே அதிமுக பாஜக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.


