விழுந்தது அதிமுகவின் முக்கிய விக்கெட்... தட்டித்தூக்கிய பாஜக!

 
சோழவந்தான் மாணிக்கம்

ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்துவது குறித்த விவாதிக்கப்பட்டு வருகிறது.

Image

இச்சூழலில் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அங்கம் வகித்த மூத்த நிர்வாகி  சோழவந்தான் மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று திருப்பூரில் நடைபெற்றவரும் பாஜக கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவான மாணிக்கம் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். 

பாஜகவில் திடீரென ஐக்கியம்

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஏற்படுத்திய 11 பேர்கொண்ட வழிகாட்டுதல் குழுவிலும் இவர் முக்கிய உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துகு ஆதரவளித்த 11 எம்எல்ஏக்களில் ஒருவர் சோழவந்தான் மாணிக்கம். 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராகவே வாக்களித்தார். நடந்துமுடிந்த தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.