எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு போட்டால் சந்திக்க தயார்- வைத்திலிங்கம்

 
Vaithilingam

திருச்சியில் வரும் 24ஆம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தை ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

vaithilingam

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், “உண்மையான அதிமுக நாங்கள்தான். இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான்.  இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு போட்டால் சந்திக்க தயார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கொடி, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. அதிமுக கொடியில் இரட்டை இலை சின்னம் எப்பொழுதும் இருக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் என அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் இல்லை என கூறவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் பல மாநாடுகளை நடத்துவோம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் தான் இருக்கிறார். மாநாட்டுக்கு கூட்டணி கட்சிகளுக்கு எந்த அழைப்பும் கொடுக்கப்படவில்லை” எனக் கூறினார்.