பாஜகவுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடா? ராஜன் செல்லப்பா விளக்கம்

 
rajan chellappa

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 25 இடங்கள் என்பது குறித்த கேள்விக்கு,  தேர்தல் நேரத்தில் அது குறித்து பேசப்படும், அப்போது கூட்டணி யார் யார் உடன் என்பதும் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து அப்போது பேசப்படும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு  கருத்து

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பா, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 25 இடங்கள் தேவை என பாஜக குரல் எழுப்பி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இடங்கள் ஒதுக்குவது குறித்து பேசப்படும், அப்போது யார் யாரிடம் கூட்டணி என்பது தெரிய வரும். தற்போது அது குறித்து எதுவும் பேசுவதற்கு எதுவும் இல்லை.

 அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் எவரை பற்றியும் கவலை இல்லை,  ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைய வந்தால் ஏற்றுக் கொள்வோம்.எழுதாத பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையில்லாத ஒன்று. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் உண்மையான அதிமுக என நிர்வாகிகள் மற்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.கிண்டியில் மட்டுமல்ல பல்வேறு இடங்களில் அம்மா உணவகத்தை இடிக்கிறார்கள்” என தெரிவித்தார்.