“எடப்பாடி பழனிசாமி அடுத்த பிரதமரா? செம காமெடி”- புகழேந்தி நக்கல்

 
கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்ஸூக்கும் சம்பந்தம் உண்டு: புகழேந்தி

அடுத்த பிரதமர் எடப்பாடி பழனிசாமிதான்னு இவங்க சொல்லறதுதான் இன்னைக்கு டாப் காமெடி என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நக்கலடித்துள்ளார். 

ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தால் போதும்: புகழேந்தி அதிரடி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரும் ஒன்றாம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி, சேலத்தில் மாபெரும் மாநாட்டை நடத்தவேண்டுமென்ற எங்கள் கோரிக்கையை ஏற்று, ஓபிஎஸ் முடிவெடுக்க இருக்கிறார். இந்த மாநாட்டுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி காணாமல் போய்விடுவார்.

செந்தில் பாலாஜி பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். ஆரம்பத்தில் மதிமுக, பின்னர் திமுக தொடர்ந்து அண்ணா திமுக, மீண்டும் திமுக என மாறி மாறி வந்தவர். ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக செந்தில் பாலாஜி மீது விசாரணை இல்லை. 2015 ஆம் ஆண்டு இவர் மீது கூறப்பட்ட புகாரில் தான் இவரை அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அது சம்பந்தப்பட்ட வழக்கு தான் தற்போது வருமான வரி துறையாலும், அமலாக்கத்துறையாலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

செந்தில்பாலாஜி பற்றி நாங்கள் நன்கு அறிந்தவர்கள். அவர் டெல்லிக்கு விசாரணைக்கு போனால் நடந்த உண்மைகளை எல்லாம் சொல்லிவிட்டு அதற்கு பரிகாரமாக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராக வருவதற்கு கூட வாய்ப்பு உண்டு. அந்த அளவிற்கு மிகவும் சாமர்த்தியம் ஆனவர் செந்திபாலாஜி. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் எவரும் இவர் மீது நல்லெண்ண அபிப்பிராயத்தில் இல்லை. இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. என்னிடமே ஆதாரத்துடன் 60 கோடிக்கு மேல் இவர் பெற்ற லஞ்சத்திற்குரிய விவரம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு குற்றவாளி, அதை மறந்து அவர் அசிங்கமாக தமிழக முதல்வரையும் இந்த ஆட்சியையும் கேவலப்படுத்தி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை அடுத்த பிரதமர் என செல்லூர் ராஜூ கூறிவருகிறார். இதுதான் இன்றைய டாப் காமெடி.

நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? – புகழேந்தி

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படாததும், எடப்பாடி பழனிசாமி ஊழல் வழக்குகள் மற்றும் கோடநாடு வழக்கில் விசாரிக்கப்படாததும் ஏன் எனப் புரியவில்லை? இதை மக்களும், நாங்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவில்லை. இதனை மாண்புமிகு முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் ஆட்சி மீது நம்பிக்கை போய்விடும். ரகசிய உடன்பாடு இருப்பதாகவே ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. செந்தில் பாலாஜி போன்றவர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றால் கலெக்ஷன் வரும், ஆனால் எலக்ஷனில் தோற்றுப் போகும். 

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக மாறி உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதை ஓபிஎஸ், அன்றைய தினமே அறிக்கையின் மூலம் கண்டித்து உள்ளார்கள் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்தார்.