எடப்பாடி பழனிசாமி 5 நிமிஷம் யோசிச்சா அதிமுகக்கு விடிவுகாலம்: புகழேந்தி

 
Pugazhendhi

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ஜே.சி.டி. பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளனர். இதற்காக அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து விலகி எடப்பாடி பழனிசாமிக்கு தூது விடும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். 

Pugalendhi

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “சசிகலா, டிடிவி தினகரன் ரெடியா இருக்காங்க.. எடப்பாடி பழனிசாமி 5 நிமிஷம் யோசிச்சா அதிமுக-க்கு விடிவுகாலம் பிறந்திடும்.. எடப்பாடி பழனிசாமி கையில்தான் எல்லாமே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி எங்க பழைய நண்பர், நல்லவர், வல்லவர்... கட்சியை காப்பாத்த வேண்டியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்து எல்லாரும் இணைந்தால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும். அனைவரும் ஒத்துழைத்தால் வெற்றி கிடைக்கும். அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை தேடி தருவோம். டிடிவி தினகரன்

தனது அமமுக கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவுடன் வந்து இணைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைய மனமிறங்காமல், ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டில் தேசிய கட்சி உள்ளே வந்துவிடும்.  திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற கொள்கையில் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக ஒன்றிணைய ஒத்துக்கொள்வார்” என்றார்.