மீண்டும் போர்க்கொடி? இபிஎஸ் உடன் சமாதானம் வேண்டாம் என்பதில் சி.வி.சண்முகம் உறுதி

 
ச்

எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானம் வேண்டாம் என்பதில் சி.வி.சண்முகம் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று இரவு மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் அடுத்தக்கட்டம் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என இபிஎஸ்க்கு எஸ்.பி.வேலுமணி தரப்பினர் 2 முறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வேலுமணி தரப்புக்கு ஆதரவாக சிலர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும், அப்போது அவர் சமாதானமாக செல்லுங்கள் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக பயணித்து மாவட்ட செயலாளர் பொறுப்புகளை பெறலாம் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானம் வேண்டாம் என்பதில் சி.வி.சண்முகம் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.