எனக்கு பதவி ஆசை இல்லை- ஓ.பன்னீர்செல்வம்
மீண்டும் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநாட்டில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “கட்சியில் மீண்டும் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தொண்டனை முதல்வர் ஆக்குவேன். என்னை தொண்டராக பெற்றதை பெரும் பாக்கியம் என ஜெயலலிதா கூறியதுதான் எனது வாழ்வில் பெரும் பாக்கியம். அதிமுகவை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம். தொண்டர்களை நம்பிதான் இந்த தர்மயுத்தத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம்.
அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான். விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மாநாடு தேதி அறிவிக்கப்படும். திருச்சியில் கடல் இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது, அந்த கடலை இன்று தொண்டர்கள் கொண்டுவந்து நிலை நிறுத்தியுள்ளீர்கள். வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும். அதிமுக வங்கி கணக்கில் உள்ள நிதியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அதிமுக கட்சி நிதியை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை டுக்கப்படும்.” என பேசினார்.