#BREAKING மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூன் இறுதியில் முடிவடைகிறது.
விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த 57 இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ள 6 இடங்களில், 4 இடங்கள் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளன.
இதில் திமுகவின் 3 இடங்களுக்கான வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடத்தை காங்கிரஸுக்கு திமுக வழங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் 2 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மரும் போட்டியிடுவதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.