அதிமுக சீட்- ரூ.1 கோடி பேரம்! கேபி முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு புகார்

 
kp munusamy

சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் சீட் பெற்றுத்தர ரூ.1 கோடி கேட்டதாக கேபி முனுசாமி மீது பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

kp munusamy

ராணுவ கட்டுப்பாடு போல் இருந்த அதிமுக இன்று சிதற் தேங்காய் போல , சில்லு சில்லாக உடைந்திருக்கின்றது. கோஸ்டி மோதலால் அதிமுக கட்சி தலைவர்கள் சிதறி பயணித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஒ பன்னீர் செல்வம் மறுபுறம் அதிமுகவின் தலைமையின் நாற்காலிக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு விட்டு வைப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுகின்றன. 

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி, “சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் சீட் பெற்றுத்தர ரூ.1 கோடி கேட்டார். பணத்தை பெற்றுக்கொள்ள மகனை அனுப்புவதாக கூறினார்.  தற்போது ஆடியோ வெளியிட்டுள்ளேன். விரைவில் இதுதொடர்பான வீடியோவையும் வெளியிடுவேன். கேபி முனுசாமி தனது சொந்த ஆதாயத்துக்காக உழைக்கிறார். நிர்வாகிகள் நியமனத்துக்காக கேபி முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டார். எனது ஆடியோவுக்கு பதில் கூறாவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன். கேபி முனுசாமி பற்றி தொண்டர்களுக்கும் தெரியவேண்டும் என்பதால் ஆடியோவை வெளியிடுகிறேன்” எனக் கூறினார்.