அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக இந்த தேர்தல் வெற்றி தான்- கேபி முனுசாமி

 
kp munusamy

கிருஷ்ணகிரியில் அதிமுகவின் துணைப் பொது செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்து.. ஓபிஎஸ்  மீது மாஜி சரமாரி அட்டாக் | KP Munusamy criticized OPS as a person who did  not make any ...

அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. இந்த இடத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக தாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளுங்கட்சியினர் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களை வைத்து ஈரோடு தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற்றார்கள். ஆனால், அதிமுகவினர் எந்த சலசலப்பும் இன்றி போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். எனவே தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என மீண்டும் நிரூபித்துள்ளோம். 

அந்த வகையில் அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக இந்த தேர்தல் வெற்றி தான். இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை. மேலும் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட சலசலப்பால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து, தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என நிரூபித்துள்ளோம். அடுத்த தேர்தலில் தங்களின் தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள். 

அதேபோல் கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு டெபாசிட் இழந்தது. ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் இரண்டாவது இடம் பிடித்துள்ளோம்.  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வெற்றி ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது. இது ஒரு தொகுதியில் நடக்கக்கூடிய தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்பது தமிழகம் முழுவதும் நடைபெறும். ஆகவே, இந்த தேர்தலின் வெற்றி ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது” என தெரிவித்தார்.