’குடிகாரத் தெரு நாய்’ திமுக பிரமுகரை சாடிய ஜெயக்குமார்
திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அரசியலில் மாற்றங்கள் இயல்பு, தேர்தல் வரும்போது கூட்டணியில் மாற்றம் வரும். திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வெளியேறும். குடிகாரத் தெரு நாய் லியோனி, குடிச்சிட்டு என்ன பேசுறது என தெரியாமல் பேசுகிறார். அவர் பிறப்பே சரியில்லை. அவர் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர். உதயநிதி, லியோனி ஆகியோர் பக்குவமும், முதிர்ச்சியும் இல்லாத அரசியல்வாதிகள்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை உதயநிதியால் ஒழிக்க முடியாது.. அதிமுக அழிந்துவிடும் என கூறுகின்றனர். ஆனால் 2026-க்கு பிறகு திமுக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். திமுக என்பது கரையான் மாதிரி... தமிழகத்தை கரையான் பிடித்துள்ளது, உதயநிதி ஒரு கத்துக்குட்டி. விடியா ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகளிடமே திமுகவினர் லஞ்சம் கேட்கின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் முன்பே திமுகவினர் லஞ்சம் கேட்கின்றனர். திமுகவினர் லஞ்சத்தில் ஊறி திழைக்கின்றனர். திமுக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு விரோதமான சட்டங்களை அதிமுக எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” என்றார்.