அதிமுக மாநாட்டை தடுக்க முதல்வர் சதி- ஜெயக்குமார்

 
அதிமுக மாநாட்டை தடுக்க முதல்வர் சதி- ஜெயக்குமார்

அதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வர உள்ளார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தெரிந்துக்கொண்டதால், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

jayakumar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வருகை தர உள்ளனர், 40,000 வாகனங்கள் வரவுள்ளது. அதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உளவுத்துறை மூலம் இதை உறுதி செய்துக்கொண்டு, இதை எப்படியாக தடுக்க முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுகவினரால் பேனர்கள் வைக்க முடியவில்லை, ஆனால் திமுகவினர் பேனர்கள் வைக்கிறார்கள். 

பொள்ளாச்சியில் பலூர் பறக்கவிடப்பட்டவர் மீது வழக்கு பதிந்துள்ளார்கள். இப்படி நிர்பந்தங்களை கொடுத்து வருகிறார்கள். அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால், 20ம் தேதி நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரதம் செய்கிறோம் என்று நாடகத்திற்காக ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியை தான் காட்டுகிறது. ஏன் இந்த உண்ணாவிரத போராட்டத்தை 19 அல்லது 21ம் தேதி நடத்துங்களேன்? எதற்காக 20ம் தேதியை தேர்வு செய்தீர்கள்? திமுகவுக்கு தூக்கத்தில் கூட சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். உங்களை தூங்க விடாமல் செய்வது அதிமுக தான். நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியே இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக போராட தகுதியே இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின்” என்றார்.