அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்- ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுகவின் சட்ட விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் மார்ச் 20 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும், வேட்புமனுவை வாபஸ் பெற மார்ச் 21 ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் சட்ட விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். ஜனநாயக முறையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். முறையப்படியான ஒரு அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே அவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் அடிப்படை உறுப்பினர் தகுதி காலாவதியாகும். ஆகவே அவர்களுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.