”அதிமுக அடிமையாக இருந்ததால்தான் பாஜக இதையெல்லாம் செய்தது” முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

 
முக்கூர் சுப்பிரமணியன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தொழிலாளர்களின் மே தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் கலந்துகொண்டார். 

இக்கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தொழிலாளர்களின் நலனில் அதிமுக அரசு அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது என்று பேசினார். அதனை தொடர்ந்து பேசிய கலசப்பாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், “ஒரு ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அல்ல, ஓர் ஆயிரம் பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுக கட்சியை வீழ்த்த முடியாது. அப்படி ஒருபோதும் கனவு காண வேண்டாம்” எனக் கூறினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், “இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தான் சிப்காட் சாலை வழியாக சென்றேன். சாலை தரமானதாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசுடன், அதிமுக அடிமையாக இருந்ததால்தான் நிறைய பொருட்களை மக்களுக்கு கொடுக்க முடிந்தது ” என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.