திமுகவில் இணைந்தது ஏன்? அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்

 

திமுகவில் இணைந்தது ஏன்? அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்

அதிமுக என்பது உடைந்த பானை என அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன் விமர்சித்துள்ளார்.

திமுகவில் இணைந்தது ஏன்? அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவருமான வ.து. நடராஜன், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இவருடன் இவரது ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வ.து நடராஜன், “அதிமுக என்பது உடைந்த பானை, சசிகலா அதில் சேர்ந்தாலும், கட்சி தேராது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒரு கம்பெனி போல் நடத்திவருகிறார். கொங்குமண்டலம் திமுகவின் கோட்டையாக மாறும். அதிமுகவின் எதிர்காலம் முடிந்தது. அதிமுக அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது. சசிகலாவின் விடுதலைக்கு பின் அதிமுக- அமமுக இணைப்பு நடக்கும் என நினைத்தேன். நடக்கவில்லை. ஆதலால் திமுகவில் இணைந்தேன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.