"யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்... உங்களுக்கு என்ன பிரச்சனை?"- ஈபிஎஸ்

 
"யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்"- ஈபிஎஸ் "யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்"- ஈபிஎஸ்

பாஜக- அதிமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

eps

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியின்போது மக்கள் கோரிக்கையை ஏற்று ஈரோடு தாலுகாவை ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி எனப் பிரித்து மூன்று தாலுகாவாக உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு தீபாவளியின் போது பெண்களுக்கு புத்தம் புதிய சேலை வழங்கப்படும். பாஜக- அதிமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன பிரச்சினை? நீங்கள் பதற்றமடைகிறீர்கள். யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் சேவை ஆற்றும் கட்சி அதிமுக. 2026 சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருக்க முடியும். 

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் தடையின்றி கிடைக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. நாங்கள் சுட்டிக்காட்டியபோதே போதைப்பொருளை ஒழிக்காமல் விட்டுவிட்டார் ஸ்டாலின். கை மீறி போன பிறகு முதலமைச்சருக்கு ஞானோதயம் வந்துள்ளது. 21 அப்பாவி குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பான இருமல் மருந்து கம்பெனி தமிழ்நாட்டில் இருந்ததே மாநில சுகாதாரத்துறைக்கு தெரியவில்லை. மக்கள் மீது எந்த அளவிற்கு திமுக அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார்.