தேசியக் கட்சிகள் நம்மை துரும்பாக பார்க்கிறார்கள்- எடப்பாடி பழனிசாமி

 
EPS

40 தொகுதிகளிலும் அதிமுகவின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் சங்கரன்கோவிலில் அதிமுகவின் 52-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற ஏற்றம் பெற திட்டங்களை கொண்டு வந்த கட்சி அதிமுக. அதிமுக பாஜகவில் இருந்து பிரிந்து விட்டது என நாங்கள் கூறுகிறோம். ஆனால் பி டீம் என முதலமைச்சர் சொல்கிறார், அவர் ஏன் இதை பற்றி கவலை கொள்கிறார். எங்களை கண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார். யாருக்கும் நாங்கள் அஞ்சவில்லை. அஞ்சப்போவதும் இல்லை. தேசியக் கட்சிகள் நம்மை துரும்பாக பார்க்கிறார்கள்.

அதிமுக தலைமையில் கூட்டணி 40 அமைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என அதிமுக நினைக்கவில்லை, தமிழக மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். அவர்களுக்கு தேவையானதை பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். 2026- ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே தற்போது மகளிர் உரிமைத்தொகை ஒரு சில பேருக்காக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு வரும் பாராளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக இருக்க வேண்டும்” என்றார்.