பாஜகவுக்கு இத்தனை தொகுதிகளா?.. கடுப்பான கூட்டணிக் கட்சிகள்!

 

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகளா?.. கடுப்பான கூட்டணிக் கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. தொகுதிகள் இறுதியானாதால் பிரச்சாரம் அதற்கு தகுந்தாற்போல இருக்கும். அதிமுகவுக்கு முட்டுக் கட்டையாக இருந்த சசிகலாவும் தற்போது அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்து விட்டதால், அதிமுக தனது முழு கவனத்தையும் திமுக மீது செலுத்தியிருக்கிறது.

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகளா?.. கடுப்பான கூட்டணிக் கட்சிகள்!

3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஸ்கெட்ச் போட்டிருக்கும் அதிமுக, 170 தொகுதிகளில் தனது வேட்பாளரையே களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அதிமுக பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. பாஜகவுக்கு அதற்கும் குறைவான தொகுதிகளையே இடங்களையே கொடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ள தொகுதி பட்டியலில் 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகளா?.. கடுப்பான கூட்டணிக் கட்சிகள்!

அதாவது வட மாவட்டங்களில் 5, கொங்கு மண்டலத்தில் 5, மத்திய மாவட்டங்களில் 10, சென்னை மற்றும் அதன் புறநகர் தொகுதிகளில் 5, தென் தமிழகத்தில் 15 என மொத்தம் 40 தொகுதிகளை கேட்பதாக கூறப்பட்டது.அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைமை 30 தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது. இது பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். தொகுதிகளை தேர்ந்தெடுப்பதில் இது பிரச்னையை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது.