மக்கள் நலனுக்கான பணம் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட கணக்குளுக்கு சென்றிருக்கும்.. எதிர்க்கட்சிகளை சாடிய ஆதித்யநாத்

 
கரும்பு பயிரிடுவதை குறைத்தால் சர்க்கரை நோய் குறைந்துவிடும்: யோகி ஆலோசனை

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், மக்கள் நலனுக்கான பணம் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட கணக்குளுக்கு சென்றிருக்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசம் பரூகாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும், வளர்க்கும் காங்கிரஸ் நாட்டுடன் எப்படி விளையாடுகிறது என்பது யாருக்கும் மறைக்கப்படவில்லை.  முன்பு (காங்கிரஸ்) அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதிகளை தூண்டிவிட்டு, இன்று ஆட்சியில் இல்லாதபோது பொதுமக்களின் நலனுக்கான ஒவ்வொரு பணியையும் எதிர்க்கிறார்கள்.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

அனைவருக்கும் இலவசமாக கோவிட்-19 தடுப்பூசிகளையும், ஏழைகளுக்கு இலவச ரேஷன்களையும் (அரிசி உள்ளிட்டவை) வழங்குகிறோம். நல்லாட்சி அமையும் போது இதுதான் நடக்கும். சமாஜ்வாடி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், மக்கள் நலனுக்கான பணம் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட கணக்களுக்கு சென்றிருக்கும். நல்ல அரசாங்கம் வந்தால் நல்ல திட்டங்களும் வரும்.

காங்கிரஸ்

மோசமான அரசாங்கம் வந்திருந்தால், அனைத்து உணவு தானியங்களும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி அல்லது காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கும். உத்தர பிரதேச அரசு கோவிட் நிலைமையை கையாண்ட விதத்தை முழு நாடு மற்றும் உலகத்தால் பாராட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இலவச கோவிட் கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டு அனைவருக்கும், இலவச தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.