காங்கிரஸ் கட்சியின் தயவால்தான் மம்தா பானர்ஜி தேசிய தலைவரானார்... ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி விளாசல்

 
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

காங்கிரஸ் கட்சியின் தயவால்தான் மம்தா பானர்ஜி தேசிய தலைவரானார் என்று அந்த கட்சியின் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடான தனது உறவை அவர் (மம்தா பானர்ஜி) பயன்படுத்தி கொள்கிறார். பா.ஜ.க.வை எதிர்க்கிறேன் என்ற போர்வையில், நிஜத்தில் பா.ஜ.க.வுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். காங்கிரசை அழிக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியால் பா.ஜ.க. மிகப்பெரிய பலனடையும்.

மம்தா பானர்ஜி

காங்கிரஸை ஒரங்கட்டினால், மம்தா பானர்ஜியால் ஒன்றும் செய்ய முடியாது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி, தனித்து  முன்னேற முடியும். காங்கிரஸ் கட்சியின தயவால் மம்தா பானர்ஜி தேசிய தலைவரானார். காங்கிரஸ் செயல்படும் அரசியல் கட்சியல்ல, செயல்படாமல் மற்றும் பலவீனமாக போய்விட்டது என்ற தவறான எண்ணத்தை அவர் கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்கீழ், நாங்கள் சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் (ஆட்சியில்) இருக்கிறோம்.

காங்கிரஸ்

எதிர்வரும் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில், நாங்கள் எங்கள் வேட்பாளர்களுடன் போட்டியிட விரும்புகிறோம். மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க மற்றும் வாக்களிக்க மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அனுமதித்தால் மட்டுமே மத்திய படைகள் தேவை. நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.