எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறார்... மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டிய காங்கிரஸ்
எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறார் என்று மம்தா பானர்ஜியை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது தலைமையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். மேலும் பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியாக திரிணாமுல் காங்கிரஸ் இருக்கும் என்று கூறுகிறார். மேலும் பாரம்பரிய மிக்க கட்சியான காங்கிரஸை கடுமையாக மட்டம் தட்டி வருகிறார்.

இந்த சூழ்நிலையில், டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், நான் 2024 தேர்தல்களில் நாடு முழுவதும் பா.ஜ.க. தோற்பதை பார்க்க விரும்புகிறேன். மறுபடியும் ஒரு விளையாட்டு இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் மம்தா பானர்ஜி மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த எல்லாவற்றையும் அவர் (மம்தா பானர்ஜி) செய்கிறார். ஏனென்றால் தன்னுடைய மருமகன் அபிஷேக் பானர்ஜியை பாதுகாப்பதற்கு அவருக்கு மோடி ஜியை மகிழ்விக்க செய்வது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


