காங்கிரஸ் தோல்வியை விமர்சித்த ப சிதம்பரம்.. அதிருப்தியாளர்கள் புது கட்சி தொடங்கலாம்.. சவுத்ரி ஆவேசம்

காங்கிரஸ் தோல்வியை விமர்சித்த ப சிதம்பரம்.. அதிருப்தியாளர்கள் புது கட்சி தொடங்கலாம்.. சவுத்ரி ஆவேசம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்து ப.சிதம்பரம் விமர்சித்ததையடுத்து, அதிருப்தியாளர்கள் புது கட்சி தொடங்கலாம் அல்லது வேறு கட்சிக்கு போகலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார்.

பீகார் தேர்தல் மற்றும் மற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக அந்த கட்சியின் கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. தற்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தேர்தல் தோல்வி தொடர்பாக தனது கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் தோல்வியை விமர்சித்த ப சிதம்பரம்.. அதிருப்தியாளர்கள் புது கட்சி தொடங்கலாம்.. சவுத்ரி ஆவேசம்
ப.சிதம்பரம்

இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறுகையில், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடந்து முடிந்து இடைத்தேர்தல்கள் முடிவுகள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்த முடிவுகள், கட்சி ரீதியாக நிறுவன அமைப்பு இல்லை அல்லது கணிசமாக பலவீனமடைந்துள்ளது என்பதை காட்டுகின்றன என்று தெரிவித்தார். ப.சிதமபரத்தின் கருத்துக்கு மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தோல்வியை விமர்சித்த ப சிதம்பரம்.. அதிருப்தியாளர்கள் புது கட்சி தொடங்கலாம்.. சவுத்ரி ஆவேசம்
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: காங்கிரஸ் தங்களுக்கு சரியான கட்சி இல்லை என்று சில தலைவர்கள் சிந்தித்தால், அவர்கள் புதிய கட்சியை தொடங்கலாம் அல்லது வேறு எந்தவொரு கட்சியிலும் சேரலாம். அவர்களின் நலனுக்கு ஏற்ப தங்களை முற்போக்கானவர்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் காங்கிரசின் நம்பகத்தன்மையை அது அழிக்கக்கூடும் என்பதால் அவர்கள் இத்தகைய சங்கடமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.