மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

 

மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது. எல்லையில் சீன படைகள் அத்துமீறல், கோவிட்-19 கையாளுதல், பொருளாதார வீழ்ச்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசை ஒரு காட்டு காட்டலாம் என எதிர்க்கட்சிகள் ஆர்வமாக இருந்தன. ஆனால் திடீரென கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

ஆனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அசாரண சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுவதால், கேள்வி நேரத்தை கைவிடுவதை ஒப்புக்கொள்ளுமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்னிடம் கேட்டார். கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும் என நான் சொன்னேன். அதன் மறுசீரமைப்பை நாங்கள் கோருகிறோம்.

மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி
ராஜ்நாத் சிங்

மழைக்கால கூட்டத்தொடரை ஆன்லைனில் நடத்துமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஆறு மாதங்களுக்கு பிறகு வரும் 14ம் தேதி முதல் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது. இதை சாத்தியமாக்கும் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். நாடாளுமன்ற கூட்டத்தின்போது கேள்வி நேரம் மற்றும் ஜீரோ நேரம் முக்கியம். நான் அவரிடம் சொன்னேன் நாடாளுமன்ற அமர்வு என்பது அரசாங்கத்தின் வேலை. நாங்கள் ஒத்துழைக்க விரும்புகிறோம். ஜீரோ நேரம் 30 நிமிடங்கள் இருக்கும் ஆனால் கேள்வி நேரம் இருக்காது என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் விரும்பினால் இதை (கேள்வி நேரத்தை வைத்திருக்க) செய்யலாம் இந்த சூழ்நிலையிலும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்தார்.