தவெகவுக்கு ரூ.8.20 கோடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா

 
“அதிமுக தான் தவெக; இரட்டை இலை தான் விசில்”- ஆதவ் அர்ஜூனா

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள FORM 24A-வில் ரூ.13.30 கோடி நன்கொடை பெற்ற விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தவெகவுக்கு அதிகபட்சமாக ரூ.8.20 கோடி கொடுத்துள்ளவர் ஆதவ் அர்ஜுனா. இவர் சாதாரண நன்கொடையாளர் அல்ல. கடந்த 2014-ல் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து பிரசாந்த் கிஷோரை அறிமுகப்படுத்தியவர். பின்னர் விசிகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர். கடந்த டிசம்பர் 2024-ல் விசிகவில் இருந்து விலகி, 31.01.2025 அன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். விஜய்க்கு அடுத்து கட்சியின் மிக உயர்ந்த பதவியான தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கத்தில் வென்று தற்போது பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். தன் சொந்த பணத்தையே கட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இரண்டாவதாக ரூ.5 கோடி கொடுத்துள்ள ரஞ்சித் குமார், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அல்ல, தவெகவின் சொந்த எம்.எல்.ஏ.தான். இவர்தான் R.V.ரஞ்சித்குமார். 2021-ல் அமமுக சார்பில் உத்திரமேரூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பின்னர் தவெகவில் இணைந்து 2026 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.எல்.ஏ. ஆனார். தற்போது தமிழக அரசின் வனத்துறை அமைச்சராக உள்ளார். தேர்தலுக்கு முன்பே தனது தொகுதியில் கட்சியை வளர்க்க தனது சொந்த நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 6-வது தெருவை முகவரியாக கொண்ட இந்த இரு நிறுவனங்கள் DD மூலம் தலா 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் தூத்துக்குடி துறைமுகத்தை மையமாக கொண்ட ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (SNOW TRANS) நிறுவனங்கள் ஆகும். விஜய்யின் தீவிர ஆதரவாளர்களாகவும், தூத்துக்குடி மாவட்ட தவெகவின் நிதி ஆதரவாளர்களாகவும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

மொத்தத்தில் தவெகவின் 13.3 கோடி நன்கொடையில் 13.2 கோடி கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவரிடம் இருந்தே வந்துள்ளது.