ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை- ரோஜா

 
ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை- ரோஜா

ஐதரபாத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு காரணமாக இருந்தார் என கூறுவதா? என நடிகர் ரஜினிகாந்துக்கு ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

'ரஜினியின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது..' ரஜினிகாந்தை கேள்விகளால் துளைத்த அமைச்சர் ரோஜா!


விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “சந்திரபாபு நாயுடு எனது 30 ஆண்டுகால நெருங்கிய நண்பர், இங்கு அரசியல் பேச வேண்டாம் என அனுபவம் கூறுகிறது. ஆனால் நாயுடு இருக்கும் இடத்தில் சிறிது அரசியல் பேசலாம். ஐதரபாத் நகரை ஹைடெக் சிட்டியாக மாற்றி காட்டியவர் சந்திரபாபு நாயுடு. நாயுடுவின் விஷன் 2040 செயல்படுத்தப்பட்டால் ஆந்திரா எங்கோ சென்றுவிடும். பாலய்யா ஒரு தட்டு தட்டினால் ஜீப் பறக்கும்.. இதெல்லாம் நாங்க பண்ணா மக்கள் ஒத்துக்க மாட்டாங்க.. பாலய்யா பண்ணா மட்டும்தான் ஏத்துப்பாங்க” என பேசியிருந்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் பாபட்டலாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஐதரபாத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு காரணமாக இருந்தார் என கூறுவதா? ரஜினிகாந்தின் பேச்சு வியப்பாக உள்ளது. என்.டி.ராமராவின் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம் என அனைவருக்கும் தெரியும். ரஜினியின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது. ரஜினிக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை. சட்டமன்றத்தில் என்.டி.ஆரை அவமதிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு நடந்து கொண்டார். அது தொடர்பான பதிவு மற்றும் வீடியோ இருக்கிறது. வேண்டுமென்றால் ரஜினிக்கு அனுப்பி வைக்கிறேன். என்.டி.ஆர் தனது இறுதி காலத்தில் சந்திரபாபுவை பற்றி தவறாக கூறினார். அவரை பற்றிய ரஜினிகாந்த் பேச்சு வியப்பாக உள்ளாது ” எனக் கூறினார்.