யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜை.. அமித் ஷாவை கிண்டலடித்த அபிஷேக் பானர்ஜி

 
துர்கா

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜை இடம் பெற்றுள்ளதை குறிப்பிட்டு அமித் ஷா அபிஷேக் பானர்ஜி கிண்டல் செய்துள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில்,  அருமையான பாரம்பரிய பட்டியலில் கொல்கத்தாவின் துர்கா பூஜை பொறிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் இந்தியா என்று பதிவு செய்துள்ளது. மேலும் ஒரு தெய்வத்தின் சிலைக்கு ஒருவர் வர்ணம் தீட்டும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இருந்தது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சனம் செய்துள்ளார் அபிஷேக் பானர்ஜி.

அபிஷேக் பானர்ஜி

அபிஷேக் பானர்ஜி டிவிட்டரில், தேர்தல் அரசியல் சுற்றுப்பயணங்களில் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடவில்லை என்று பெருமையுடன் கூறிய அமித் ஷா மற்றும்  பா.ஜ.க.வில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் 2 நிமிடங்கள் மவுனம். உங்களது ஒரு பக்க மற்றும் புரளி வெளிபட்டது. நீங்கள் இன்னும் மீண்டும் வெளிப்பட்டு நிற்கிறீர்கள் என்று பதிவு செய்த இருந்தார்.

அமித் ஷா

கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் போது, வாக்கு வங்கி அரசியல் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் துர்கா பூஜையை அனுமதிப்பதில்லை என்று குற்றம் சாட்டி இருந்தனர். இந்நிலையில் தற்போது கொல்கத்தாவின் துர்கா பூஜையை யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது.