ப.சிதம்பரம் மக்களை தவறாக வழி நடத்துகிறார்.. அபிஷேக் பானர்ஜி குற்றச்சாட்டு

 
ப சிதம்

ப.சிதம்பரம் மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டினார்.

கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முதல் முறையாக களம் இறங்குகிறது.   கோவாவின் பானாஜியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: பா.ஜ.க.வுக்கு எதிரான இந்தப் போரை நாங்கள் எங்கள் வலிமையுடன் எதிர்கொள்கிறோம். 

அபிஷேக் பானர்ஜி

நமது தலைவர் மம்தா பானர்ஜி கோவுக்கு இரண்டு முறை வந்தார். அப்போது மக்கள் பெரும் ஆதரவை பொழிந்தனர். பா.ஜ.க.வை தோற்கடிப்பதாக என்று சொல்வதற்கும், அவர்களுக்கு (பா.ஜ.க.) எதிராக போராடுவதற்கும் என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.  ஆனால் எங்களுக்கு எதிராக பொய்கள் பரப்படுகின்றன. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் பிரிப்பதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸின் சிதம்பரம் மக்களை தவறாக வழி நடத்துகிறார். அவர் தனது சிறிய அரசியல் நலனுக்கு மேல் உயர தவறி விட்டார். 

பா.ஜ.க.

நாங்கள் பொய் சொன்னால், அவர் வழக்கறிஞர் என்பதால் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். மக்கள் மத்தியில் தவறான புரிதலை பரப்பினால், எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும். பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தோற்றால் சிதம்பரம் ஜி ராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் கூடுதல் முயற்சிகள் மேற்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.