தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிகமாக செலவு பண்ண சொல்றாங்க.. கட்சியிலிருந்து வெளியேறிய ஆம் ஆத்மி வேட்பாளர்

 
ஆஷு பாங்கர்

பஞ்சாபில் ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நபர், தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிகமாக செலவு பண்ண அழுத்தம் கொடுக்கிறாங்க என்று அந்த கட்சியிலிருந்து விலகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறுவதாக இருந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் அதேமாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த மாநிலத்தில் பெரோஸ்பூர் கிராமப்புற சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆஷு பாங்கர் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த கட்சியிலிருந்து நேற்று திடீரென விலகுவதாக அறிவித்தார்.

ஆம் ஆத்மி

ஆஷு பாங்கர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிக செலவு செய்யும்படி ஆம் ஆத்மி தலைமையால் அவமானப்படுத்தப்பட்டேன்  மற்றும் அழுத்தம் கொடுக்கிறாாகள் என்று தெரிவித்தார். அதேசமயம், ஆஷு பாங்கர் காங்கிரஸில் இணைய போவதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார். இது தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில்,  ஆம் ஆத்மி கட்சியில இருந்து வெளியேறிய பெரோஸ்பூர் கிராமப்புற வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில்  சேருவார் என்று தெரிவித்தார்.

நவ்ஜோத் சிங் சித்து

அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்ஷங்கர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான லவ் குமார் கோல்டி தனது ஆதரவாளர்களுடன், கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர்.