எல்லோரும் கணவு கண்ட கோவாவை மீட்டெடுப்போம்.. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர் உறுதி

 
அமித் பலேகர்

எல்லோரும் கணவு கண்ட கோவாவை மீட்டெடுப்போம் என்று ஆம் ஆத்மியின் கோவா தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர் உறுதியளித்தார்.

ஆம் ஆத்மியின் கோவா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமித் பலேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊழலற்ற கோவாவுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். கோவாவின் இழந்த பெருமையை மீட்டெடுப்போம். எல்லோரும் கணவு கண்ட கோவா, கடந்த 20 ஆண்டுகளில் தனது அடையாளத்தை இழந்த கோவா, அந்த கோவாவை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கிறோம். நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் காப்பாற்றுவேன் அதுவே எனது உத்தரவாதம் என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்  கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளராக அமித் பலேகரை அறிவித்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக கூறியதாவது: அமித் பலேகர் தொழில்ரீதியாக வழக்கறிஞர் மற்றும் பண்டாரி சமூகத்தை சேர்ந்தவர். பண்டாரி சமாஜ் கோவாவில் உள்ள சமூகத்தின் மிகப்பெரிய பிரிவாகும். 

அரவிந்த் கெஜ்ரிவால்

அவர்களில் யாரும் முதல்வராக இல்லை என்று வேதனைப்படுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் கோவா முதல்வர் முகமான அமித் பலேகர், கோவவுக்கு நிறைய செய்துள்ளார். கொரோனா காலங்களில் நிறைய பங்களித்துள்ளார். மேலும் இதுவரை அரசியல் செய்யாத புதிய முகம். கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக ஒரு நேர்மையான மனிதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமூகத்தில் நலன்புரிப் பணிகளுக்காக நன்கு அறியப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.