கோவா சட்டப்பேரவை தேர்தல்.. ஆம் ஆத்மியின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியானது

 
ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலுக்கான பத்து வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கோவாவில் ஆளும் கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சில மாதங்களாக தேர்தல் பணிகளை தீவிரவமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரே கட்டமாக  பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலுக்கான பத்து வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொறுப்பாளர் அதிஷி இந்த பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில், கோவா ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கன்வீனர் ராகுல் மம்ப்ரே, செசில் ரோட்ரிக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு 2 தினங்களுக்கு முன்தான் ஆம் ஆத்மி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதிஷி

ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொறுப்பாளர் அதிஷி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசுகையில், கோவாவில் மாற்றத்தை கொண்டு வர ஆம் ஆத்மி கட்சி முழுமையாக தயாராகி வருகிறது. இந்த அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கும் போகும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.