சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு- அதிருப்தியை சம்பாதிக்கும் தவெக

 
“இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி..”- முதல்வர் விஜய்

தமிழக வெற்றி கழக அரசு ஆண்டுக்கு 5 லட்சம் கீழ் வருமானம் உள்ளவர்கள் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசாணை வெளியிட்டதில் 2.5 லட்சம் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தை பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  

இப்படித்தான் அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவித்துவிட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி என்று தமிழக வெற்றிக்கழக அரசு அறிவித்தது. அன்னபூரணி திட்டத்தின் கீழ் கூட ஆறு சிலிண்டருக்கு பதிலாக மூணு சிலிண்டர் தருவதாக மட்டுமே கூறியுள்ளனர். இதற்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டுகின்றனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்கான நிதியை தயார் செய்துவிட்டு இது போன்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

இதுபோன்று அருமையான திட்டங்களை கொண்டு வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றாமல் அதன் பலனை முழுமையாக மக்களிடம் கொண்டு சேராமல் பெயரளவுக்கு அந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது பொதுமக்கள் மத்தியில் வெறுப்பையும் அதிருப்தியையும் தான் விதைக்கும் என்பதை இந்த அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. இன்னும் மதிப்புமிகு மகளிர் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. அரசாணை வெளியிட்டு அந்த திட்டத்தை கொண்டு வந்தால் தான் அதில் எவ்வளவு பிரச்சனை வர இருக்கிறது என்பது அரசாணை வெளிவந்த பிறகு தான் தெரிய வரும்.