திமுகவை தாங்கி நிற்கும்..தம்பி உதயநிதி.. ஸ்டாலின் புகழாரம்

 
சு

கட்சியில் தனக்குப் பிறகு ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணியை உருவாக்கி அதில் திமுகவில் ஸ்டாலினை முக்கிய பங்காற்ற வைத்து அதன் மூலம் கட்சியின் தலைவராவதற்காக வழி வகுத்தவர் கருணாநிதி.  அவர் வழியில் மு. க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ஆக்கி,  அதில் அவர் வளர்ந்து வரும் விதத்தையும் அவரால் கட்சிக்கு கிடைத்து வரும் செல்வாக்கை பற்றியும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ட்ட்

 1980 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி திமுக துணை அமைப்பாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது .  இன்று ஜூலை 20ஆம் தேதி என்பதால் திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட தினம் என்பதால் அது குறித்த நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.  

’’ மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் 1980 ஆம் ஆண்டில் ஜூலை 20ஆம் தேதி அன்று திமுக இளைஞரணி உருவாக்கப்பட்டது.  உங்களில் ஒருவனான என்னிடம் இளைஞர் அணியின் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.   இளைஞர் அணி தொண்டர்களுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்து கழகக் கொடிகளை ஏற்றி வைத்து,  மன்றங்களை தொடங்கி வைத்து இந்த அமைப்பை வெளிப்படுத்தினோம்.  11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இளைஞரணி சார்பில் அன்பகம் எனும் அலுவலகத்தை பெற்றோம்.   திமுகவில் அனைத்து போராட்டங்களிலும் முதன்மையாக நின்றது இளைஞர் அணி.   அதனால் தான்’ வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர்கள் என் உடன்பிறப்புகள்’ என்று கலைஞரின் சொற்களுக்கு இலக்கணமாக இளைஞர் அணி செயல்பட்டது’’ என்கிறார் ஸ்டாலின்.

ட்ட்ட்ட்

‘’ இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஈழத் தமிழர் நலன் காத்திடுவதற்காகவும் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து கலைஞர் அறிவித்த ஜனநாயகப் போர்க்களங்களில் அஞ்சாத பட்டாளமாக முன் நின்று சிறைச்சாலைகளை நிரப்பியது இளைஞர் அணி .  2004 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் திமுக கொடியினை உயர்த்தி வைக்கும் வாய்ப்பை இளைஞரணி செயலாளரான எனக்கு வழங்கினார் கலைஞர் .  எல்லாவற்றுக்கும் சிகரமாக 2007 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்த இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டில் கலைஞரும் ,  இனமான பேராசிரியர்,  கழக முன்னோடிகளும் பங்கெடுத்து கொட்டும் மழையிலும் நடந்த பேரணியை தனி மேடையில் கண்டு ரசித்து வாழ்த்தினார்கள். அது என் வாழ்வில் மறக்கவே முடியாதது’’என்கிறார்.

க்

’’இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து கலைஞரை பிரித்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர் பொறுப்பை உங்களில் ஒருவனான என் தோளில் உடன்பிறப்புகளான நீங்கள் சுமத்தி இருக்கிறீர்கள்.   தமிழ்நாட்டில் முதல்வர் என்ற பொறுப்பை இந்த மாநிலத்து மக்கள் பெரும் நம்பிக்கையுடன் என்னிடம் அளித்திருக்கிறார்கள்.    இரண்டு பொறுப்புகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்கிற உறுதியுடன் என் பணிகளை தொடர்ந்து வருகிறேன்.   இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் என் இளமைப் பருவம் முதல் இயக்கத்தோடு என்னை இரண்டற கலக்கச் செய்தது கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பும் , இளைஞர் அணியும்.    இயக்கத்தில் எனக்கு தாய்மடியாகும்.  அதில் தவழ்ந்த காலத்தை நினைத்தால் இப்போதும் இனிமை தருகிறது’’என்று நெகிழ்கிறார்.

ச்ச்ச்

 ’’இளைஞர் அணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது அதனை தம்பி உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதை கண்டு தந்தையாக அல்லாமல் கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன்.   காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று வாழ்த்துகிறார்.

ஊ

மேலும்,   ’’மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு உதயநிதியும் அவரது இளைஞர் அணி பட்டாளத்தினரின் பணிகள் துணை நின்றன. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு,  நீட் விலக்கு போராட்டம் , கொரோனா கால நிவாரண பணிகள் ஆகியவற்றில் எல்லாம் இளைஞர் அணியின் பங்களிப்பை பார்த்து ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன்’’ என்றும் நெகிழ்கிறார்.

ட்ட்

’’ இளைஞர்களிடம் இலட்சியத்தை கொண்டு சேர்க்கும் வியூகமும் எதையும் தாங்கும் இந்த இயக்கத்தை கட்டி காத்து தமிழ்நாட்டை உலக அளவில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கும் துணை நிற்கக் கூடிய இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞர் அணி தன் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’’ என்று வாழ்த்துகிறார்.  ’’இயக்கத்தை கட்டி காக்கும் பெரும்பணியில் இளைஞர் அணி பட்டாளத்தின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர்ந்திட தாய் உள்ளத்தோடு வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின்.