வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டது நீங்கள்தான் - அழகிரிக்கு பாஜக பதிலடி

 
அ

நீட் விவகாரத்தில் மாணவர்களின் வயிற்று எரிச்சல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சும்மா விடாது என்று சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற கூடாது என்பதில் ஏன் இந்த அளவு கோபமாக உள்ளார். திமுக மீதும் காங்கிரஸ் மீதும் கோபம் இருந்தால் அந்த கட்சிகள் மீது அதை காட்ட வேண்டும்.  ஆனால், லட்சக்கணக்கான சாதாரண மாணவர்கள் மீது இந்த கோபத்தை அவர் காட்டக் கூடாது, மாணவர்களின் வயிற்று எரிச்சல் அவரை சபிக்கும் என்று மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார் கே.எஸ் அழகிரி.

na

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,   ’’பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்வி நிறுவனத்தை நடத்தி, ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பணம் பெற்று கொண்டு போலி சான்றிதழ்களை வழங்கி பல மாணவர்களின் வாழ்வை கெடுத்து பெற்றோர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டது நீங்கள் தானே தவிர அண்ணாமலை அல்ல. நீட் ஏழை மாணவர்களின்  வயிற்றை குளிர்விக்கிறது. ஏழை குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.