மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள்.. மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கிய யோகி ஆதித்யநாத்

 
யோகி

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களை பட்டியலிட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக தாக்கினார்.

உத்தர பிரதேசத்தில் அம்மாநில சட்டப்பேரவையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: அண்மையில் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி உத்தர பிரதேசத்துக்கு வந்தார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 142 தொகுதிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன. 25 ஆயிரம் வாக்கு சாவடிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் தங்கமிடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 57 கட்சி தொண்டர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 123க்கும் மேற்பட்ட பெண்கள். சுமார் 7 ஆயிரம் எப்.ஐ.ஆர்.க்கள் பதிவு செய்யப்பட்டன. இதுதான் அங்குள்ள நிலைமை. உத்தர பிரதேசத்தில் தேர்தலின் போது அல்லது அதற்கு பிறகு எந்த வன்முறையும் இல்லை. இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சுவேந்து ஆதிகாரி

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு நடந்த கொடூர வன்முறை சம்பவங்களை முன்னிலைப்படுத்தியதற்காக யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கு வங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி நன்றி தெரிவித்தார். சுவேந்து ஆதிகாரி டிவிட்டரில், யோகி ஆதித்யநாத்தின் சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்து, உ.பி. சட்டப்பேரவையில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசும் போது, கொடூரமான மேற்கு வங்க தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களை முன்னிலைப்படுத்தியதற்காக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜிக்கு  எனது நன்றியை மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பொறுப்பான வார்த்தைகளுக்கு நன்றி என பதிவு செய்து இருந்தார்.