அந்த பிரதமரையும் பார்த்தோம். இன்று ராமர் கோயில் கட்டுமானத்தை தொடங்கி வைத்த பிரதமரையும் பார்த்தோம்.. யோகி

 
யோகி ஆதித்யநாத்

கோயில் புனரமைப்புக்கு எதிர்த்து தெரிவித்த பிரதமரையும் (நேரு), பார்த்தோம், இன்று ராமர் கோயில் கட்டுமானத்தை தொடங்கி வைத்த பிரதமரையும் பார்த்தோம் என்று பிரதமர் மோடியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழ்ந்து பேசினார்.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ மாநாட்டு மையத்தில் modi@20 என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  பேசுகையில், முன்னாள் பிரதமர் நேருவின் பெயரை குறிப்பிடாமல், அவருடன் மோடியை ஒப்பிட்டு பேசினார். யோகி ஆதித்யநாத் கூறியதாவது: தனது நாட்டு பாரம்பரியத்தை பற்றி பெருமிதம் கொள்ளாத ஒரு பிரதமர் (நேரு) இருந்தார். இன்று தனது பாரம்பரியத்துடன் இணைத்து, ஒரே பாரதம், சிறந்த பாரதம் என்று முழு இந்தியாவையும் உருவாக்க தீர்மானித்த நரேந்திர மோடியும் இருக்கிறார். 

நேரு

பயங்கரவாத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழ்கிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்தின் வேரை நிரந்தரமா ஒழிப்பதில்  எந்த தயக்கமும் இல்லை. இதுவே பிரதமர் மோடியின் தலைமையின் திறமை. சோம்நாத் கோயில் புனரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த மற்றும் அந்த கோயில் விழாவுக்கு சென்ற குடியரசு தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமரையும் பார்த்தோம், இன்று அயோத்தியில் பிரமாண்டமான ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணியை அவரே தொடங்கி வைத்த ஒரு பிரதமரை நாம் பார்த்திருக்கிறோம். 

நேரு

இன்று உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். இந்த புத்தகம் நரேந்திர மோடியின் 20 ஆண்டுகால நிர்வாக பணியை அடிப்படையாக கொண்டது. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளை சேர்ந்தவர்களால் விவரிக்கப்பட்டது. இந்த புத்தகத்தின் இந்தி பதிப்பு இன்று (நேற்று) காசியில் வெளியிடப்படுகிறது. இதற்காக காசி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, ஏறக்குறைய 200 ஆண்டுகள் நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த நிலையை நாடு எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.