வீர் சாவர்க்கர் சொன்னதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருந்தால், நாடு பிரிவினையிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும்... யோகி

 
சாவர்க்கர்

வீர் சாவர்க்கர் சொன்னதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருந்தால், நாடு பிரிவினையின் சோகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேசம் லக்னோவில் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில், வீர் சாவர்க்கர்-இந்திய பிரிவினையை யாரால் தடுக்க முடியும் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு தொலைநோக்கு என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

யோகி ஆதித்யநாத்

புத்தக வெளியீட்டு விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: சுதந்திரத்திற்கு பிறகு வீர் சாவர்க்கருக்கு உரிய கவுரவம் வழங்கப்படவில்லை. மாறாக அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. வீர் சாவர்க்கர் சொன்னதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருந்தால், நாடு பிரிவினையின் சோகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கும். 

காங்கிரஸ்

அவருக்கு (வீர் சாவர்க்கர்) 1960 வரை அவரது மூதாதையர் சொத்து கூட கிடைக்கவில்லை. இந்துத்துவா என்ற வார்த்தை வீர் சாவர்க்கரால் உருவாக்கப்பட்டது. இந்தி சொற்களஞ்சியத்தின் பல வார்த்தைகள் வீர் சாவர்க்கருக்குக் காரணம். ஆனால் அப்போதைய அரசு (காங்கிரஸ்) அவரை ஜின்னாவுடன் ஒப்பிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.