நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதனை நாங்கள் செய்தோம்... யோகி ஆதித்யநாத்

 
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச மக்களிடம் நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதனை நாங்கள் செய்தோம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் 100 நிறைவடைந்ததை முன்னிட்டு கையேடு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றுகையில் கூறியதாவது: 2019ல் சமாஜ்வாடி வென்ற அசம்கர் மற்றும் ராம்பூர் ஆகிய 2 மக்களை தொகுதிகளை இந்த ஆண்டு இடைத்தேர்தலில் பா.ஜ.க. கைப்பற்றியது.  

பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் முதல் முறையாக ஒரு அமைக்கப்பட்ட அரசாங்கம் ஐந்தாண்டுகளும் ஆட்சி செய்து, பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதனை நாங்கள் செய்தோம். உத்தர பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய  மாநிலம், நாட்டை முன்னோக்கி வழிநடத்த முடியும். உத்தர பிரதேசத்தல் அன்னிய முதலீடு அதிகரிக்க நடவடிக்கைகளுடன், குண்டர்த்தனம் மற்றும் குற்றங்கள் என்ற பிம்பத்தை மாற்ற எனது அரசாங்கம் உழைத்தது.

சமையல் கியாஸ் விலை உயர்வு.. நாடு மற்றும் வீட்டின் பட்ஜெட்டுகளை கெடுத்த மோடி அரசு … ராகுல் காந்தி தாக்கு

தேவையற்ற மைக்ரோபோன்களை முதலில் அகற்றியுள்ளோம், அதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒலி மாசுபாட்டை அகற்றலாம். 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மைக்குகள் அமைதியான முறையில் அகற்றப்பட்டன. 1.66 கோடி பயனாளிகளுக்கு ஹோலி மற்றும் தீபாவளியின்போது இலவசமாக எல்.பி.ஜி. சிலிண்டர் வழங்கப்படும் என எங்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் முடிவு செய்துள்ளோம். விமான பயணம் பலப்படுத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் நம்மிடம் இரண்டு விமான நிலையங்கள் இருந்தன, இரண்டு கட்டுமானத்தில் இருந்தன. இப்போது நம்மிடம் 9 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன, மேலும் 10 பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.