உத்தர பிரதேசம் மீண்டும் தேசியவாதம் மற்றும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தது.. யோகி ஆதித்யநாத்

 
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம் மீண்டும் தேசியவாதம் மற்றும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் கோரக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பகவான் நரசிங் ஹோலிகோத்சவ ஷோபா யாத்திரை நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக நீங்கள் ஹோலியின் உற்சாகத்துடன் இணைந்திருக்கிறீர்கள். கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஹோலியில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. 

ஆர்.எஸ்.எஸ்.

மேலும், இந்த நிகழ்வில் நேரில் பங்கேற்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவதாக, உத்தர பிரதேசம் மீண்டும் தேசியவாதம் மற்றும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 17ம் தேதியன்று கோரக்பூரில் நடந்த ஹோலிகா தஹால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேநாளில், யோகி ஆதித்யநாத் அங்குள்ள கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பா.ஜ.க.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 255 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கோரக்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் சுபவதி உபேந்திர தத் சுக்லாவை 1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.