ஒரு தேசம், ஒரு கட்சி, ஒரு உச்ச தலைவர் என்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.. யஷ்வந்த் சின்ஹா

 
யஷ்வந்த் சின்ஹா

ஒரு தேசம், ஒரு கட்சி, ஒரு உச்ச தலைவர் என்பதை தடுத்து நிறுத்த வேண்டும் அதை உங்களால் (எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்) மட்டும் முடியும் என்று யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

இன்று குடியரசு தலைவர் தேர்தல நடைபெற உள்ளநிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா நேற்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் யஷ்வந்த் சின்ஹா கூறியிருப்பதாவது: நமது அரசியலமைப்பின் முன்னோடி தூண் ஆன மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காக நான் நிற்கிறேன். 

திரௌபதி முர்மு

இந்த தூணை தகர்த்து பெரும்பான்மை மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று உறுதியை மறைக்காத கட்சியை சேர்ந்தவர் எனது போட்டியாளர் (திரௌபதி முர்மு). ஒருமித்த மற்றும் ஒத்துழைப்பின் அரசியலை ஊக்குவிப்பதற்காக நான் நிற்கிறேன். எனது போட்டி வேட்பாளர் மோதல் மற்றும் மோதல் அரசியலை கடைப்பிடிக்கும் ஒரு கட்சியால் ஆதரிக்கப்படுகிறார். 

சீனா

நாட்டின் அடுத்த குடியரசு தலைவராக திருமதி திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜனநாயக இந்தியாவை கம்யூனிச சீனாவை பின்பற்றும் நாடாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பார். ஒரு தேசம், ஒரு கட்சி, ஒரு உச்ச தலைவர். இதை நிறுத்த வேண்டாமா? ஆம், இதை நிறுத்த வேண்டும். உங்களால் மட்டுமே அதை நிறுத்த முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.