வாய்க்கு வாய் எம்.ஜி.ஆர். என் பெரியப்பா என்று ஸ்டாலின் சொன்னது பொய்யாகிவிட்டதே - ஆர்.பி.உதவியகுமார்

 
m

 மதுரை உலகத் தமிழ் சங்க நுழைவு வாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் படத்தை அகற்றியதன் மூலம் எம்ஜிஆரை பெரியப்பா என்று முதல்வர் ஸ்டாலின் பொய்யுரை பேசியது நிரூபணம் ஆகி இருக்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் .  

mg

இது குறித்து ஆர். பி. உதயகுமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் .  அந்த வீடியோவில்,    இலக்கிய திருவிழாவில் திமுகவின் ஆட்சிக்காலம் தமிழ் மொழியின் ஆட்சிக்காலம் என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.   ஆனால் மீனாட்சி சொக்கநாதர் இருக்கும் மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை 1986 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர் தான் நடத்திக் காட்டினார்.   தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றை பறைசாற்றுகின்ற வகையிலே எம்ஜிஆர் நடத்திய மாநாடு அமைந்தது.  இது உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ma

 அவர் மேலும் அந்த வீடியோவில்,  மதுரையில் உலக தமிழ் சங்க வளாகத்தில் 1986 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அடிக்கல் நாட்டிய கல்வெட்டு,  எம்ஜிஆர் புகைப்படம் அடிக்கல் நாட்டிய தொடக்க விழா காட்சிகள் யாவும் முகப்பு வாயிலில் வைக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு மரியாதை செய்வது என்பது ஒரு மரபாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   ஆனால் இன்றைக்கு அது அகற்றப்பட்டிருக்கிறது.  

 எம்ஜிஆரை வாக்குக்காக என் பெரியப்பா என்று அழைத்த முதலமைச்சர் , இன்றைக்கு இதை அறிவாரா என்பதை மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.  வாய்க்கு வாய் நான் அவரோடு பழகியவன் வளர்ந்தவன் என்னை ஆளாக்கியவர் என்றெல்லாம் ஸ்டாலின் சொன்னது பொய்யுரை என வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  எம்ஜிஆர் படத்தை நீங்கள் அங்கு இருந்து அகற்றி விட்டு உலக தமிழ் சங்கம் என்று நீங்கள் வைத்திருக்கிற அந்தப் படம் என்பது அரசியல்  காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டுகிறது என்கிறார்.

r

 எம்ஜிஆரின் அந்த கல்வெட்டு திருவுருவப்படம் உடனடியாக அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும்.   இல்லையென்றால் மதுரை மாவட்டம் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்ட களத்தில் மதுரை மக்களோடு சேர்ந்து அநீதியை கண்டித்து போராடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்.