எடப்பாடியை முற்றுகையிட்ட பெண்கள்! குமாரபாளையத்தில் பரபரப்பு

 
ec

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென்று பெண்கள் முற்றுகையிட்டு முறையிட்டதால் குமாரபாளையம் பரபரப்பு ஏற்பட்டது. 

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சென்றிருந்தார்.   

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட  தண்ணீர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரம்  வசிக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச்சேர்ந்த 340 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன .  அவர்களுக்கு அதிமுக சார்பில் இன்று உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ku

 முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.  பின்னர் அவர் ஈரோடு மாவட்டம் பவானி செல்வதற்காக காரில்  சென்று கொண்டிருந்தார்.

 அப்போது வழியில் அவரது காரை முற்றுகையிட்டனர் பெண்கள்.  அவர்களை அருகே அழைத்து என்னவென்று விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி.  அதற்கு,   சமையல் எரிவாயு விலை அதிகரித்துவிட்டது .  மளிகை பொருட்களும், அத்தியாவசிய பொருட்கள் விலையும் மிக உயர்ந்து விட்டது.  இதை குறைப்பதற்கு உடனடியாக மத்திய அரசிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.

 உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.