நல்ல நேரம் பார்க்காம திமுக நிகழ்ச்சி ஏதாவது நடக்குதா?திமுக எம்.பி.க்கு காங்கிரஸ் எம்பி நெத்தியடி

 
co

அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமிபூஜை போடப்பட்டதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் ஆவேசப்பட்டு,  பூஜை செய்த அர்ச்சகரை விரட்டியடித்தார்.  அதிகாரிகள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.  திமுக எம்.பியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்திருக்கிறார்.  நல்ல நேரம் பார்க்காமல் திமுகவின் எந்த நிகழ்ச்சியாவது நடக்குதா? பதவி ஏற்புக்கு கூட நல்ல நேரம் பார்க்குறீங்களே? இந்து மத சடங்குகள் இல்லாமல் திமுகவினரின் இல்ல திருமணமங்கள் நடக்குதா? புதுமனை புகுவிழா நடக்குதா?  என்று கேட்டி நெத்தியடி அடித்திருக்கிறார்.

ss

  தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி.   அங்கே மத்திய ,மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்க இருந்திருக்கின்றன.   அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் அழைக்கப்பட்டு இருந்தார்.  இதை அடுத்து அந்த நிகழ்ச்சிக்கு எம் பி செந்தில்குமார் சென்றிருக்கிறார்.  அங்கே பணியை தொடங்குவதற்கு முன்பாக இந்து மத முறைப்படி பூமி பூஜை நடந்து இருக்கிறது.

 இதை பார்த்து கொதித்து எழுந்த செந்தில்குமார் எம்பி,    ’’இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடம் கிடையாது.  அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா?   தெரியுமா... இல்லை தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா ? ‘’என்று அந்த அதிகாரி மீது பாய அதிகாரி எதுவும் சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்கிறார்.

’’அப்படி பூஜை செய்துதான் நடத்த வேண்டும் என்றால் இந்து மதத்தினரை  மட்டும் வச்சு ஏன் நடத்துகிறீர்கள்? முஸ்லீமை கூப்பிடுங்கள், கிறிஸ்தவர்களை கூப்பிடுங்கள்.  கடவுளே இல்லை என்று சொல்லும் திராவிடர்களையும் கூப்பிடுங்கள்.  எல்லாரையும் அழைத்து இதை  செய்யுங்கள்.  குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் செய்வதற்கு என்ன இது ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்.  அல்ல.   இது திராவிட மாடல் ஆட்சி.  எல்லோருக்கும் பொதுவானது.  

bfg

 உடனே குறிக்கிட்ட அந்த அதிகாரி,   ’’’இல்ல... அமைச்சரே பூமி பூஜை செய்யச் சொன்னார் ’’என்று அந்த அதிகாரி சொல்ல,  ‘’எந்த அமைச்சர் எந்த அமைச்சர்’’ என்று அதிகாரி மீது செந்தில்குமார் ஆவேசம் காட்ட,  அந்த அதிகாரி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்க,  ‘’முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இதுபோன்ற எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?  இது திராவிட மாடலா ஆட்சி?  இது போன்ற நிகழ்வு நிகழ்ச்சிகள் இனிமேல் நடத்தக் கூடாது.  அரசு விழாவில் அப்படி நடத்த வேண்டும் என்றால் அனைத்து மதத்தினரையும் அழைத்து பூஜை செய்யுங்கள் .  ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது ’’என்று சொல்லிவிட்டு கராராக உடனே அங்கிருந்து பூஜையை பாதியிடம் நிறுத்திவிட்டு அங்கு எந்த பூஜை பொருட்கள் எடுத்துக் கொண்டு அர்ச்சகரை அங்கிருந்து வெளியேறச் சொல்லி உத்தரவிட்டார்.   இதை அடுத்து பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் அங்கிருந்து வெளியேறினார் .   அதன் பின்னர் எந்தவித பூஜையும் செய்யாமல் ஏரி சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில்குமார் எம்பி.  

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்,  '’இது முற்றிலும் தேவையற்ற செயல்.  ஒரு உண்மையைச் சொல்லுங்கள்.. இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் உங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத்திலாவது திருமணம் நிகழ்கிறதா? புதுமனைப் புகுவிழா  நடக்கிறதா?’’ என்று கேட்டிருக்கிறார்.   மேலும்,  ’’மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிட தலைவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்’’ என்கிறார்.

 ’’ஒவ்வொரு பதவி பிரமாண நிகழ்ச்சியும் அல்லது பதவி ஏற்பு விழாவும் அரசாங்க நிகழ்வு தான்.   அங்கே நல்ல நேரம் பார்க்காமல் ஏதாவது நடக்கிறதா?  பதவி பிரமாணம் பதவி ஏற்பு விழா நடந்த நேரத்தைச் சொல்லுங்கள் .  அந்த நேரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து நான் விளக்குகிறேன்’’ என்று நெத்தியடி அடித்திருக்கிறார். 

 அதாவது நல்ல நேரம் பார்த்து தான் திமுகவின் அரசியல் நிகழ்ச்சிகளோ பதவியேற்பு நிகழ்ச்சிகளோ நடக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார் கார்த்திக் சிதம்பரம்.