ஓபிஎஸ் கைக்கு வருகிறதா சாவி? தீர்ப்புக்காக காத்திருக்கும் அதிமுகவினர்

 
ad

ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்கிற முறையில் ஓபிஎஸ்சிடம் அதிமுகவின் தலைமை அலுவலக சாவி ஒப்படைக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

o

 அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பாக ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறையினால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.  இதற்கு எதிராக எடப்பாடி , ஓபிஎஸ் இருவரும் தொடர்ந்த வழக்கில் சீலையை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை எடப்பாடி இடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

 அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்,  ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இதை அடுத்து அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட்  மனு தாக்கல் செய்திருந்தார்.   அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஓபிஎஸ் அப்பீல் மனுவை விசாரிக்கும் போது,  தனது தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்று அந்த கேவியட் மனுவில் தெரிவித்திருந்தார்.

su

 ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வந்து என்.வி. ரமணா இந்த வழக்கை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.  அதன்படி,  அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி இடம் ஒப்படைப்பதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .  இன்றைக்கு நடைபெறும் விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  மற்றும் பொருளாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் இடம் அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது அதிமுகவினரிடையே.