காவிக் கொடி ஒரு நாள் நிச்சயம் தேசிய கொடியாக மாறும்! அமைச்சர் சர்ச்சை பேச்சு

 
Karnataka Minister

காவிக் கொடி ஒரு நாள் நிச்சயம் தேசிய கொடியாக மாறும் என்றும் தேசிய கொடி கம்பத்தில் காவி கொடியை ஏற்றியதில் என்ன தவறு உள்ளது என்றும் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவரிடம் தேசியக் கொடி கம்பத்தில் காவி கொடி ஏற்றப்பட்ட சர்ச்சை விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஈஸ்வரப்பா, இது சர்ச்சைக்குரிய விஷயமே கிடையாது என்று பதில் கூறினார். கொடிக்கம்பம் என்பது பொதுவானது. அதில் எப்போது தேசிய கொடி மட்டும் ஏற்றப்படுவது கிடையாது என்று பதிலளித்த நிலையில் கன்னட நாடு பிறந்த தினத்தில் கொடிக்கம்பத்தில் கர்நாடக கொடியும் ஏற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல் நேற்று காவி கொடி ஏற்றப்பட்டுள்ளது. என்றாவது ஒருநாள் 200 வருடங்கள் கழித்து அல்லது 500 வருடங்கள் கழித்து நிச்சயம் காவிக்கொடி தேசிய கொடியாக மாறலாம். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டவே முடியாது என்று கூறிவந்த நபர்களுக்கு இன்று ராமர் கோவில் கட்டப்பட்டு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் இதுவும் நடக்கக்கூடும் எனக் கூறினார்.