மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? எடப்பாடிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

 
e

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அப்போது அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என சொல்லி அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அதே பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

e

 கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று நடந்த அதிமுக பொதுக் குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து  தொடர்ந்து வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  உட்கட்சி  விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

 இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக இருந்தார்.  இதற்கிடையில்,  அவருக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர் ஓபிஎஸ் தரப்பினர் .  இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கில் விசாரணையில் இருந்து விலகிக் கொண்டார்.  இதன்பின்னர்  இந்த வழக்கின் விசாரணையை  நீதிபதி ஜெயச்சந்திரன்  விசாரிக்க  தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.  

ov

 நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,   பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் முதலில் வாதம்  முன் வைக்கப்பட்ட.  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால் முறையாக பின்பற்ற விடவில்லை என்றால்  உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் நீதிபதி .

பின்னர்,  நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என சொல்லிவிட்டு அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் உருவாக்கியது ஏன்?  பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.

 பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு முடிவுகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.   இதற்கு,   பொது குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தல் செல்லாததாகிவிடுமா? என்பதை விளக்க வேண்டும் என நீதிபதி எடப்பாடி பழனிசாமி குறிப்பிட வலியுறுத்தினார்.

 அதிமுக பொதுக் குழு தொடர்பான இந்த வழக்கில் வரும் விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.