எ.வ.வேலுவுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? நான் குதர்க்கமாக கேட்கவில்லை - வேல்முருகன்
எட்டு வழி சாலை திட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். அவர் மேலும், கோரிக்கைகளை நான் வலியுறுத்தினால் கூட்டணியில் இருந்து குதர்க்கமாக பேசுகிறேன் என்கிறார்கள். முதல்வருக்கு ஆயிரம் வேலைகள் இருப்பதால் அவ்வப்போது மக்கள் பிரச்சனைகளை நினைவுபடுத்தும் வேலையைத்தான் கூட்டணியில் இருந்து செய்கிறேன்.. செய்வேன் என்றார்.
’மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்’ என்கிற தலைப்பில் சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியன. ர் அப்போது அவர், ஒன்றிய அரசால் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை நாம் தினம்தோறும் பார்த்து வருகின்றோம். தினந்தோறும் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. பாஜக ஆட்சி பணக்காரர்களை மேலும் பணக்காரர்களை உயர்த்துவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் இருக்கும் 130 கோடி மக்களின் வாழ்க்கையை வஞ்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் , மாநில அரசுகளின் உரிமைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசாக இருந்து வருகிறது ஒன்றிய அரசு என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், திமுக கூட்டணியில் நாம் இருந்த போதிலும் நம் மண்ணிற்கான உரிமைகளை கேட்க ஒருபோதும் அச்சப்பட மாட்டோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொகுதிக்காக மட்டும் தொடங்கிய மேட்டூர் அணை உபநீர் திட்டத்தை தமிழக முழுவதும் பரவலாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திமுக நம்மோடு எதிர்த்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் மேலும் , 8 வழி சாலை விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஏன் இந்த தடுமாற்றம் இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியவர், நான் கோரிக்கைகளை வலியுறுத்தினால் கூட்டணியில் இருந்து கொண்டு குதர்க்கமாக பேசுகிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் முதலமைச்சருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது என்பதால் அவ்வப்போது மக்கள் பிரச்சனைகளை நினைவுபடுத்தும் வேலையை கூட்டணியில் இருந்து செய்கிறேன்.. செய்வேன் என்றார்.